பிரித்தானியா பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க சம்மதம் வழங்குமாறு பிரதமர் தெரேசா மே மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து பேசினார்.
15 நிமிட சந்திப்புக்கு பின்னர் தெரேசா மே அளித்த பேட்டியில், தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய Conservative Party, Democratic Unionist Party-யுடன் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிரித்தானியாவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரு உறுதியான அரசு தற்போதைய இக்கட்டான நிலையில் தேவை.
இந்த அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் தொடரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு தக்கப்பதிலடி வழங்கவும் உறுதி பூண்டுள்ளது.
மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பொலிஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகளுக்கு போதிய அதிகாரத்தை வழங்கவும் புதிய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்த அரசு உறுதியுடன் செயல்படும்.
மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.