பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற தர்ம உபதேசம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றுக்கொண்டிருந்த போது குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து ஞானசார தேரர் தலைமறைவானார்.
இதனையடுத்து, கிடைத்துள்ள தகவலுக்கு அமைய பொலிஸார் பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிக்குமார் தொடர்பிலும் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில், ஞானசார தேரரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.