நாயகிகள் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் கூறும் அனைத்தையும் சகித்து கேட்க வேண்டும். அப்படி தான் அண்மையில் ஸ்ருதிஹாசன் ரசிகர்களால் மோசமாக தாக்கப்பட்டார்.
அவர் அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகு படுத்தியதாகவும், வெயிட் போட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் அவரை கலாய்த்து வந்தனர்.
இதையெல்லாம் பார்த்த ஸ்ருதிஹாசன், என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து ஹிந்தியில் பெஹன் ஹோகி தேரி என்ற படம் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரொமோஷன் வேலைகளில் ஸ்ருதிஹாசன் பிஸியாக இருக்கிறார்.