கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள கனடாவின் 150வது தேசியதினத்தில் பிரமாண்ட நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் 30 நிமிட வான வேடிக்கை, சிறப்பு ஒளிக்கீற்று காட்சிகள், பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள், பண்பாட்டு கண்காட்சி நிகழ்வுகள், பிரமாண்ட உணவுப் பந்தல்கள், பல்சுவை கலை நிகழ்வுகள் என்று பெருமளவான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் 150வது தேசியதினத்தில் ஃபோர்ட் கல்கரியில் வெள்ளை மற்றும் சிவப்பு சட்டைகளுடன் கூடவுள்ள சுமார் 4,000 பேர், பிரமாண்ட கனேடிய கொடியினையும் அமைக்கவுள்ளனர்.
இவை தவிர சைனா டவுன், ஈஸ்ட் விலேஜ், பிறின்ஸ் ஐலன்ட் பார்க், ஒலிம்பிக் பிளாசா என்று பல்வேறு இடங்களிலும், தனித்தனியே பிரமாண்டமான பல்வேறு நிகழ்வுகளும், வான வேடிக்கைகளும் இடம்பெறவுள்ளது.