அந்தமான் கடலில் விழுந்து நொறுங்கிய மியான்மர் விமான விபத்தில் பலியானவர்களில் குழந்தை உள்ளிட்ட 10 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
105 பயணிகள் உட்பட 116 பேருடன் இராணுவ விமானமொன்று Myeik நகரிலிருந்து Yangon நகருக்கு புறப்பட்டது.
நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, டாவி நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில், உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் இராணுவ விமானத்துடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
மாயமான விமானம், அந்தமான் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
விமானத்தில் பயணம் செய்த 122 பேரும் கூண்டோடு பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களில் 108 பேர் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். சிப்பந்திகள் 14 பேர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியான தகவல் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களையும், பலியானவர்களையும் தேடும் பணியில் 9 போர் கப்பல்கள், 5 இராணுவ விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஒரு குழந்தை உள்ளிட்ட 10 பேரது உடல்கள் அந்தமான் கடல் பகுதியில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோன்று விமானத்தின் ஒரு சக்கரம், கவச உடைகள், பயணிகளின் உடைமைகள் மிதந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தின் முக்கிய உடல் பாகம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.