சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் தற்போது அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சரத்குமார்.
இருப்பினும் அவர் அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. Koratala Siva இயக்கவுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபு ஆந்திர முதலமைச்சராகவும், சரத் குமார் அவருக்கு அப்பாவாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.