இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
ஆயிரம் தேரர்களின் பங்கேற்புடன் பிரித் பாராயண நிகழ்வு கடந்த ஆறாம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சாரம் தேடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறப்பு அதிரடி படையினரின் தலையீட்டினால் அது முறியடிக்கப்பட்டுள்ளது.
பிரித் பாராயண நிகழ்வின் போது, மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் பகிரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.