இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் கலக்கிவந்த ஹன்சிகா தற்போது மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். மோகன்லாலில் ‘வில்லன்’ என்ற படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதே படத்தில் நடிகர் விஷாலும் நடிக்கிறார்.
சென்ற வியாழக்கிழமை தான் அவர் இந்த படத்திற்காக நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் இன்று கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து நடித்துள்ளார்.
அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள ஒரு மருத்துவரை படப்பிடிப்பு நடக்கும் செட்டுக்கே வரவழைத்துள்ளது படக்குழு.
இப்படிப்பட்ட நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.