ரொறொன்ரோ–யுனைரெட் கிங்டத்தில் அமைந்துள்ள கனடிய உயர் ஆணையம் சனிக்கிழமை இரவு லண்டனில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதலில் கனடியர் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலதிக விபரங்கள் எதனையும் தெரிவிக்காத ஆணையம் அவசரசேவை பிரிவினர் அணி பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் இது குறித்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
லண்டன் நேரம் இரவு 10-மணியளவில் வெள்ளை நிற வான் ஒன்று லண்டன் பிரிட்ஜில் பாதசாரிகள் ஊடாக வேகமாக நுழைந்து சென்றதாக கூறப்படுகின்றது.
இத்தாக்குதலை தொடர்ந்து கனடிய குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கனடிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட பகுதியில் நடமாடுவதை தவிர்க்குமாறு லண்டன் அரசாங்கம் மற்றும் ராசதந்திரிகள் பயணிகளை அறிவுறுத்துகின்றனர்.
பொரோ மார்க்கெட் அருகாமையில் London Bridge ல் இடம்பெற்ற இச்சம்பவம் பயங்கரமானதென கனடிய பிரதம மந்திரி Justin Trudeau தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளை வான் மோதிய பின்னர் மூன்று மனிதர்கள் கத்தியுடன் ஓடிச்சென்று அருகாமையில் அமைந்துள்ள உணவகங்கள் பார்களில் இருந்த மக்களை தாக்க ஆரம்பித்ததாக யு.கே.அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஏழு பேர்கள் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 48பேர்கள்வரை காயமடைந்தனர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களில் மூவரை பொலிசார் சுட்டு கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சூடான வசந்தகாலத்தில் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இக்கொடிய சம்பவம் நடந்ததென கூறப்பட்டது.