தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீர்நிலைகளை தூர்வாரத் தொடங்கியுள்ளது மாநில அரசு.
83 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இயற்கை இடையூறு அளிக்காத பட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தலாம்.
இதுவரையிலும் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை யாரும் தூர்வாரவில்லை, இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா கூட இதைச்செய்யவில்லை என முதல்வர் பேசியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.