இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா வரும் 2020-ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்துவேன் என்று உறுதிபட கூறியுள்ளார்.
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா பாண்டே. இவர் தன்னுடைய 10 வயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இவர் சர்வதேச போட்டிகள் உட்பட 110 பதக்கங்களை நீச்சல் போட்டிகளில் பங்கேற்று குவித்துள்ளார்.
இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 6 பதக்கம், ஆசிய போட்டிகளில் 9 பதக்கம் என வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து காஞ்சனமாலா கூறுகையில், மற்ற நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காக, கூகுள் கண்ணாடிக்களை பயன்படுத்துவார்கள்.
ஆனால் எனக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது. தண்ணீருக்குள் சென்ற பின் என்னால் பார்க்க முடியாது என்பதால், அருகில் நீந்தும் சக போட்டியாளர்களின் நீச்சல் சத்தத்தை பின் தொடர்ந்து முந்துவேன். இதே உக்தியை பயன்படுத்தி பாராலிம்பிக், மற்றும் ஆசிய போட்டிகளிலும் சாதிப்பேன் என்று கூறியுள்ளார்.