ரொறொன்ரோ-மத்திய நிதி அமைச்சர் இன்று ரொறொன்ரோ பெரும்பாக்தின் சூடான வீட்டு சந்தை நிலவரம் குறித்து ரொறொன்ரோ மேயரை சந்திக்கின்றார்.
கனடாவின் மிகவும் பிரபல்யமான நகரும் அதன் சுற்று வட்டாரங்களிலும் உயர்ந்து கொண்டு செல்லும் றியல் எஸ்டேட் விலைகளினால் மாகாண அரசாங்கம் எதிர்நோக்கும் அழுத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு இடம்பெறுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் தனி வீடொன்றின் சராசரி விலை கடந்த மாதம் 1.21மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. கடந்த வருடத்தை விட 33.4சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பின்தங்கிய வாடகை வழங்கல், ஒரு காலியான சொத்துவரி மற்றும் பற்றாக்குறை றியல் எஸ்டேட் தரவு போன்றன குறித்து இன்றய சந்திப்பில் கலந்துரையாட திட்டமிட்டிருப்பதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
அமைப்பை மாற்றியமைக்காது கட்டுபடியான விலையில் வீடுகள் அமைவதற்கு என்ன செய்யலாம் என அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என ஒன்ராறியோ நிதி அமைச்சர் சார்ள்ஸ் சுசா தெரிவித்தார்.
அதிகரித்து வரும் ரொறொன்ரோ வீட்டு சந்தை நாட்டின் மற்றய பகுதிகளிலும் எதிரொலிக்கலாம் என கடந்த வாரம் கனடா வங்கி தலைவர் எச்சரித்துள்ளதாக அறியப்படுகின்றது.