பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு அகதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளரான லீ பென் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் 23-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகிறது.
தேசிய முன்னணி(NF) கட்சியை சேர்ந்த லீ பென் என்பவர் தற்போது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் லீ பென் பேசியுள்ளார்.
அப்போது, ‘பிரான்ஸ் நாட்டில் அளவுக்கு அதிகமான அகதிகளை அனுமதிக்க முடியாது.
பிரான்ஸ் நாடு குடிமக்களுக்கு சொந்தமான நாடாக செயல்படவில்லை.
எண்ணிக்கை இல்லாத அளவில் அகதிகளுக்கு அனுமதி கொடுத்தால், பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து விடும்.
புகலிடம் கோரி வரும் அகதிகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றுவேன்’ எனவும் லீ பென் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவானால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவேன் எனவும், தான் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால் பாரீஸ் மற்றும் நைஸ் நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்காது என லீ பென் கூட்டத்தில் பேசியுள்ளார்.