தினகரன் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது என்ற உறுதியாகியுள்ள நிலையில் அதனை பெற அந்த அணியினர் நாடகமாடுகின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக அம்மா அணியில் அரங்கேறும் அதிரடி நிகழ்வுகள் இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்ற தினகரன் அணி நாடகமாடுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சசிகலா-ஓபிஎஸ் அணியினர் அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி புகார் அளித்ததால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது.
இதனையடுத்து, டிடிவி.தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதால் ஆர்கே நகர் இடைத்தேரர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை பெற முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது அரசியல் வாழ்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும், இரட்டை இலை கிடைப்பதற்காக மிஞ்சியிருந்த வாய்ப்புகளும் நழுவியதாக கருதப்பட்டது.
இந்நிலையில் சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுவரை சின்னம்மா சின்னம்மா என சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமைச்சர்கள் திடீரென அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்றுவதற்காக போடுகிற நாடகமா என சந்தேகம் எழுந்துள்ளது.