ஸ்காபரோ-கில்வூட் தொகுதி நியமனத்தேர்தல் களத்தில் குயின்ரஸ் துரைசிங்கம்
ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில், 2018 யூன் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், புரொகிறசிவ் கொன்சவ்வேட்டிவ் கட்சியில் திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்கள் போட்டியிடவுள்ளார். கன்சவ்வேட்டிவ் கட்சிக்குள் தகுதியான வேட்பாளரைத் தெரிவுசெய்யும் வேட்பாளர் நியமனத் தேர்தல் மிக விரைவில் நடக்கவிருக்கிறது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை, மார்ச் 16ம் திகதி, மாலை 6:30 மணிக்கு ஸ்காபரோவிலுள்ள ஜேசிஸ் விருந்துபசார மண்டபத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் அறிவிக்கிறார் குயின்ரஸ் துரைசிங்கம்.
மிக நீண்டகாலமாக தமிழ் மொழிக்கும் மண்ணுக்கும் தன்னாலான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி, தமிழ் தேசியத்தின்பால் மிகுந்த பற்றுடன் செயற்பட்டு வருகின்ற, இருமொழிப் புலமைகொண்ட சிறந்த தன்னார்வத் தொண்டரும் சிறந்த நிர்வாகத் திறன்கொண்டவருமான அரசியல் ஆய்வாளர் திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்கள், தமிழ் சமூகத்தில் அதிகபட்ச தகுதியுடைய ஒருவராகக் கணிக்கப்படக் கூடியவர்.
அவரது தேர்தலுக்கான நொமினேசன் பத்திரங்களைச் சேகரிக்கும் முக்கிய பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியில் இருப்பவர்கள் தங்களது ஆதரவை வழங்கி, குயின்ரஸ் துரைசிங்கத்தின் வெற்றியை உறுதிசெய்வது அவசியம்.
மேலதிக தொடர்புகளுக்கு: 416-219-5113 என்ற இலக்கத்தில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.