1999ம் ஆண்டுக்கு பின்னர்…பிரான்சில் பேய் மழை! அச்சத்தில் மக்கள்
பிரான்ஸில் பலத்த மழையாலும், சூறாவளி காற்றாலும் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பிரான்ஸில் வடமேற்கின் Britanny, தென் கிழக்கின் Rhone-Alpes, Auvergne பகுதிகளில நேற்று கடுமையான சூறாவளி காற்று வீசியது.
இந்த காற்றானது ஒரு மணி நேரத்திற்கு 190 கிலோ மீட்டர் என்ற அளவில் பலமாக வீசியது.
காற்றுடன் மழையும் மிக அதிகமாக காணப்பட்டது. பிரான்ஸின் தலை நகரான பாரீஸையும் மழை விட்டு வைக்கவில்லை.
பலத்த மழையால் சில முக்கிய சாலைகள் பாரீஸில் மூடப்பட்டன. பல இடங்களில் பலத்த காற்றினால மின்சாரம் தடைப்பட்டது.
மொத்தம் 600,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 1999க்கு பிறகு அதிக சேதாரம் தற்போது தான் அரசு கூறியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக மரத்துக்கு கீழே காரை வைத்து நின்று கொண்டிருந்த ஓட்டுனர் மீது மரம் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலர் பல விடயங்களால் காயம் அடைந்துள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்று பலமாக வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.