கனடிய பயணிகளில் நினைத்ததை விட கடுமையான அளவில் சிக்கா வைரஸ்!
கனடிய மருத்துவ அசோசியேசன் இதழ் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில் கனடிய பயணிகள் சிக்கா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாகவும் லேசான அறிகுறிகளை அனுபவிப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அக்டோபர் 2015 முதல் 2016 செப்ரம்பர் காலப்பகுதியில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய மற்றும் கனடா பூராகவும் உள்ள நகர்ப்புற மைய மருத்துவ மையங்களிற்கு சென்றவர்கள் உட்பட்ட 1,118 பயணிகள் பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த 1,118 பயணிகளில்3.7சத விகிதமானவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
வெடிப்பு மற்றும் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்வர்களின் அறிகுறிகளாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் 24பேர்கள் பெண்கள் மற்றும் 19பேர்கள் சிறு பிராயத்தவர்கள் பெண்களில் மூவர் கர்ப்பினிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.