தமிழ்நாடே பாலைவனமாகும்- ஹைட்ரோகார்பன் பகீர் உண்மைகள்
புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் வேளாண்மை, மண்ணின் தன்மை, நிலத்தடி நீர் நச்சாதல் உள்ளிட்ட பயங்கர சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் அதிகரித்து வருகிறது.
நெடுவாசல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை இதோ.