வலுக்கும் எதிர்ப்பு: டிரம்புக்கு எதிராக ஹாலிவுட் பட உலகினர் போராட்டம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பட உலகினர் ஜனாதிபதி டிரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகமே அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி முந்தைய நாளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விருந்து விழா ஒன்று நடைபெறுவது வழக்கம்.
நேற்று அந்த விருந்து விழா ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பட உலகினர் ஜனாதிபதி டிரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மைக்கேல் பாக்ஸ், ஜோடி போஸ்டர், வில்மர் வால்டெர்ரமா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச அகதிகள் குழுவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டேவிட் மிலிபேண்ட், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அகதிகளையும் அமெரிக்காவினுள் நுழைய விடாமல் தடை செய்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.