நூறு வருடப் பழைமை வாய்ந்த யேசுவிற்கு நடந்த நிலை
நூறு வருடப் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் வைக்கப்பட்ட இயேசு சிலையின் மர்ம நபர்கள் துண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா மானிலத் தலைநகர் இந்தியானாபொலிஸ். இங்கு, கொட்டேஜ் அவனியூ என்ற பகுதியில், சுமார் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெந்தேகொஸ்தே தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக இந்த தேவாலயத்தின் வாசலில் இயேசுவின் சிலையொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தேவாலயத்துக்கு வந்த பக்தர்கள், இயேசு சிலையின் தலையைக் காணாது அதிர்ச்சியடைந்தனர். தீவிர தேடுதலையடுத்து, தேவாலயத்தின் பின்புறம் வீசப்பட்டிருந்த இயேசுவின் தலையைக் கண்டுபிடித்து மீண்டும் சிலையில் பொருத்தினார்கள். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்தது என்றே அவர்கள் நினைத்தனர்.
எனினும், அன்றைய தினம் நள்ளிரவே மர்ம நபர்கள் சிலர் மீண்டும் இயேசுவின் தலையைத் துண்டித்ததோடு, தலையைக் கையோடு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், இயேசுவின் சிலை இன்னும் தலையற்ற நிலையிலேயே இருக்கிறது.
பொலிஸார் இது குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர்.