இலங்கை கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை ஜெனீவாவில் வெளியிடப்படுகின்றது!
எதிர்வரும் பெப்ரவரி 28ம் நாளன்று, இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவரஇருக்கின்றது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக Sri Lanka – Monitoring Accountability Panel (MAP) அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப். 27ம் நாளன்றுதொடங்குகின்றது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சத் மங்கள சமரவீர அவர்கள், சபையில்உரையாற்றுகின்ற பெப் 28ம் நாளன்றே குழுவின் அறிக்கையும் வெளிவருகின்றது.
ஜெனீவாவின் ஊடக மையத்தில் மதியம் 14 45 மணிக்கு கண்காணிப்புக் குழுவின்அறிக்கை முறையாக வெளியிடப்பட இருக்கின்றது.
இக்குழுவில் பங்காற்றுகின்ற ஆறு நிபுணர்களில் இருந்து Mr Richard JRogers, Mr AndrewIanuzzi ஆகியோர் இந்த ஊடக மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.