முதல்வர் எடப்பாடியிடம் பத்திரிக்கையாளர் கேட்ட நச் கேள்வி: பதில் அளிக்க முடியாமல் திணறிய சம்பவம்
தமிழக முதல்வர் எடப்பாடியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் மணல் விற்பனை விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்ட போது, எந்த ஒரு பதிலும் செல்லாமல் வணக்கம் சொல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்ட சம்பவம் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முக்கியமான 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கும் நேரடியாக பதில் அளிக்க முடியாமல் பழனிச்சாமி திணறியுள்ளார்.
அதில் ஒன்று தான் மணல் விற்பனை விவகாரம். பத்திரிக்கையாளர் ஒருவர் மணல் விற்பனையை அரசே நேரடியாக செய்யுமா என்று அந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
இக்கேள்வியை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்வது என்று யோசித்தார். பிறகு, கேள்வியையே கவனிக்காதவர் போல இப்போது அறிக்கையாக எல்லோருக்கும் கொடுக்கிறோம்.
நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு விளக்கம் அறிக்கையில் உள்ளது, இங்கு வந்துள்ள அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி, வணக்கம் என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.
பத்திரிகையாளர்கள் பல முறை அழைத்தும் அவர் தன்னுடைய பேட்டியை தொடரவில்லை என்று கூறப்படுகிறது.