விரைவில் சட்டமாகிறது பலவந்தமாக காணாமல் ஆக்கப்படடவர்கள் தொடர்பான சட்டமூலம்
இலங்கையின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சட்டமூலம் விரைவில் சட்டமாக்கப்படவுள்ளது.
சர்வதேச நியம சமவாய அடிப்படையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. இது சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரத்தில் வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி கூடவுள்ள நிலையிலேயே இந்த சட்டமாக்கலுக்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
33வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளையும் கொண்டு இந்த சட்டமூலம்கொண்டு வரப்படவுள்ளது.
இதன்மூலம் காணாமல் போகச்செய்த குற்றங்களுக்கு உள்ளானவர்களுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன.