பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு..! மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு? அதிர்ச்சியில் சசிகலா தரப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநருக்கு திருப்தி அளிக்காவிட்டால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலாவுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சசிகலா ஆதரவாளரும் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று பெரும்பான்மை நிரூபிப்பதற்கு இரு தரப்பினரும் சட்டப்பேரவை வந்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பெரிய அமளி ஏற்பட்டது. இதனால் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின் அதிமுகவின் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நிரூபித்ததாக அவை தலைவர் தனபால் அறிவித்தார்.
மேலும் பெரும் அமளிக்கு இடையே இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. வாக்கெடுப்பை மறைமுகமாக நடத்த வேண்டும் என தெரிவித்தோம். ஆனால் அதை ஏற்காததால் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்டது தவறு தான் ஆனால் வெளிப்படையான வாக்கெடுப்பினால் இந்த அமளி ஏற்பட்டது. மீண்டும் மறைமுகமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவை அமளி குறித்த வீடியோவை ஆளுநார் சபாநாயகரிடம் கேட்டு பெறுவார் என்றும், அதற்கான விளக்கங்களை நேரில் அழைத்து கேட்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ரகசிய வாக்கெடுப்பாக தான் இருக்கும். வாக்கெடுப்பை கண்காணிக்க 2 நபர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்த விபரங்களை கண்காணிப்பாளர்கள் மூலம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும். அவர் இறுதிமுடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதே போன்று ஒரு சம்பவம் கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா இருந்த போது நடந்ததாகவும், அப்போது மறுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு வாய்ப்பினை ஆளுநர் பிறப்பிக்கும் பட்சத்தில் பன்னீர்செல்வம் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு என கூறப்படுகிறது. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே நடந்த முடிந்த வாக்கெடுப்பிற்கு, மீண்டும் மறுவாக்குபதிவா என்று அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.