இணையதளங்களை கலக்கும் ஜெயம் ரவி நடிப்பில் வனமகன்! ஒரு பார்வை
நடிகர் ஜெயம் ரவிக்கு தொடர்ந்து வெற்றிப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. தனி ஒருவன் படத்திற்க்கு பிறகு சினிமாவில் அவரது மார்க்கெட் மிகவும் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் போகன் திரைப்படமும் நன்கு வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் அவர் நடிப்பில் வரவுள்ள வனமகன் படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மரத்தில் ஜெயம் ரவி அடர்ந்த காட்டுக்குள் பெரிய மரத்தின் விழுதை பிடித்து தொங்கியவாறு போஸ்டரும், டீசரும் ரிலீஸாகியுள்ளது. ரவி ஏற்கனவே பேராண்மை என்னும் காட்டை சுற்றிய ஆக்ஷன் கதையில் நடித்திருந்தாலும் இதை பார்க்கும் போது வனமகன் முழுக்க முழுக்க காடுகளில் சுற்றித்திரியும் ஒரு மனிதனை பற்றியது என தெரிகிறது.
மேலும் இது ஹாலிவுட்டில் மிகவும் வரவேற்ப்பை பெற்ற ஜங்கிள் புக், டார்ஸன் படங்களையும் நினைவூட்டுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் தனது திறமையை இதில் காட்டுகிறார்.
ஆண்டனி எடிட்டிங்கில் டீசரை பார்க்கும் போது ஒரு மோஷன் போஸ்டர் போல வண்ணமயமாக இருக்கிறது.