சூழ்ந்துள்ள சதிகளால் துயரத்தில் மகிந்த..! – ஜனாதிபதிகள் இணைந்து சூழ்ச்சியா??
மகிந்த ராஜபக்சவின் அடுத்தடுத்து தொடர் தோல்விகளுக்கு அவரை சுற்றியுள்ளவர்களே காரணம் என கூறப்படுகின்றது.
ஆட்சியைக் கவிழ்ப்பேன் என சபதம் எடுத்த மகிந்த அதன் ஆரம்ப முயற்சியாக நுகேகொடையில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.
எனினும் அவரது நல்லாட்சிக்கு எதிரான பாதயாத்திரைக்கு ஏற்பட்ட கதியே இதற்கும் ஏற்பட்டுள்ளது. நுகேகொடை மகிந்தவிற்கு வெற்றி தரவில்லை என்றே தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இவ்வாறான அவருடைய தொடர் தோல்விகளுக்கு அவரைச் சுற்றியுள்ள தரப்பே காரணம் என கூறப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வி அடையவும் அவருடைய நண்பர்களே காரணம் எனவும் சதிகள் அவரை சூழ்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது முதல் இப்போது வரை மகிந்த நண்பர்களாலேயே தோல்வியடைந்து கொண்டு வருகின்றார்.
அப்போது கம்பஹா மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி பல அபிவிருத்திகளை செய்து வந்தது. அங்கு பசில் ராஜபக்ச தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவரே அங்கு சுதந்திரக் கட்சி தோற்க காரணம். அதே போல் பிரசன்ன ரணதுங்க அப்போதைய அமைச்சர் அவரும் கம்பஹா மாவட்ட தோல்விக்கு காரணம் இந்தியாவில் இருந்து எவரும் வருகைத் தந்து மகிந்தவை தோற்கடிக்கவில்லை.
அதேபோல் கொழும்பில் மகிந்த தோல்வியடைய காரணம் விமல், தினேஸ் குணவர்தன, உதய கம்மன் பில, காமினி லொகுகே போன்றோரே இவர்கள் அனைவரும் சேர்ந்தே தோற்கடித்தனர்.
கெஹலிய ரம்புக்வெல்ல, மகிந்தானந்த, ரத்வத்த சகோதரர், திலும் சகோதரர் இணைந்து கண்டி மாவட்டத்தை தோற்கடித்தனர்.
இவர்கள் மட்டும் இல்லா விட்டால் மகிந்த வெற்றி வெற்றி பெற்றிருப்பார். சூழ்ச்சிகள் வெளியில் இருந்து வர வில்லை சுற்றி உள்ளவர்களாலேயே சுழ்ச்சிகளும் சதிகளும் இடம் பெற்று வருகின்றன என சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் சந்திம வீரக்கொடி ஊடகங்களிடம் கருத்து கூறுகையில்,
மகிந்தவை அப்போது சந்தித்து நாங்கள் கூறினோம் கட்சியின் தலைமைப் பொறுப்பை வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் கூட இருக்கின்றோம் என்று.
அதற்கு “நான் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடம் ஒப்படைக்க வேண்டும் அவரை சந்திக்க உடனடியாக நேரம் ஏற்படுத்தி தருமாறு மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு அவர் கூறும் போது சுசில் பிரேமஜயன்த, அநுர யாப்பா, மகிந்த அமரவீர, டிலான் பெரேரா, லசந்த அலகியவன்ன போன்ற அமைச்சர்கள் அனைவரும் இருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அப்படி என்றால் 9.30 மணிக்கு பிறகு நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகின்றேன் என மைத்திரி தெரிவித்தார்.
அவர் என்னிடம் வாருங்கள் என கூறவில்லை. பின்னர் மகிந்த வெளியில் வந்தவுடன் நான் மைத்திரிக்கு கட்சியை ஒப்படைத்து விட்டேன் எனக் கூறினார்.
“மைத்திரி இப்போது நீங்கள் கட்சியின் தலைவர். உங்களுக்கு பிடித்த வகையில் அமைச்சரவையினை உருவாக்கி கட்சியை பலம் மிக்கதாக மாற்றுங்கள் என மைத்திரியிடம் எங்கள் முன்னிலையில் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் எனவும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மகிந்தவின் அப்போதைய தோல்வி பற்றி இப்போது கருத்துக்களை வெளியிடக் காரணம் மகிந்த தனது பங்காளிகளை விட்டு தனித்து இயங்க இருக்கும் காரணத்தினால் எனக் கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக மகிந்த தன்னை சுற்றி உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டு வருவதாகவே தகவல்கள் வெளிவந்தன. எவ்வாறாயினும் இப்போதைய தோல்வியினால் மகிந்த நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆட்சியை கவிழ்ப்பேன் என சவால் விடுத்த மகிந்தவிற்கு இந்த தோல்வி கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக மகிந்த தன் படையை தகர்த்துக் கொள்ளுவாரா? அல்லது தொடர்ந்தும் தோல்விகளை சந்திக்கப்போகின்றாரா? என்பது இப்போதைக்கு முக்கிய கேள்வி.
முக்கியமாக அப்போதைய இப்போதைய ஜனாதிபதிகள் இணைந்து இவ்வாறான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்களா? குறிப்பாக பிரதமரைச் சுற்றியே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.,
அதனால் மகிந்த, மைத்திரியின் கூட்டு சூழ்ச்சியா இப்போது அரசியல் காய் நகர்த்தல்கள் எனவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.