தோல் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் காணப்படுகின்றது.
இந்நோய் ஆனது பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. அதாவது தோல்புற்றுநோய், குருதிப்புற்றுநோய், மூளைப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
இவற்றினைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் காணப்படுகின்ற போதிலும் நீண்ட காலத்தின் பின்னரே அறிய முடிகின்றது.
இதன் காரணமாக நோய் உச்ச நிலையை அடைத்து உயிர்கள் பறிக்கப்படக் காரணமாக அமைகின்றது.
இவ்வாறிருக்கையில் தற்போது தோல் புற்றுநோய் தொடர்பில் சற்று ஆறுதலான தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவல் வைத்தியர்களை விடவும் மிகவும் துல்லியமான முறையில் தோல் புற்றுநோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இம் முறைமை ஸ்மார்ட் கைப்பேசிகளில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இம் முறைமையின் ஊடாக வைத்தியர்களின் உதவியின்றி ஒவ்வொருவரும் தாமாவே சுய பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
குறித்த முறைமை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.