அவுஸ்திரேலிய ஓபன்: நடாலை வீழத்தி சாம்பியனாக முடிசூடினார் பெடரர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிப்பெற்று சாம்பியனாக முடிசூடியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து நடத்திர வீரர் ரோஜர் பெடரரும், ஸ்பெயின் நடத்திர வீரர் ரபேல் நடாலும் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி நடாலை வீழத்தி அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனாக முடிசூடினர்.
இது பெடரர் வெல்லும் ஐந்தாவது அவுஸ்திரேலிய சாம்பியன் பட்டம் மற்றும் 18வது கிராண்ட ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பெடரர் பழைய நிலைக்கு திரும்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.