மிக ஆபத்தான நிலையில் தமிழர் விவகாரம்: ஐ.நாவின் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச சமூகத்தின் மத்தியில் நெருக்கடியான நிலை ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.
இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரச படையினரால் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விசாரணை வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களுடன் தகவல்களை ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு வெளியிட்டுள்ளது.
24 பக்கங்களைக் கொண்ட இந்த புதிய அறிக்கை நல்லாட்சி அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன.