காதலருக்கு சமந்தா கொடுத்த அதிர்ச்சிப்பரிசு! விலை இவ்வளவா?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. கல்யாணம் என்று சொல்லி படங்களிலிருந்து விலகிப்போனவர் பின் பல படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவுக்கும் காதல் என்பது ஊரறிந்த விசயம்தான். பல இடங்களில் ஜோடியாக சுற்றிவரும் அவர்களுக்கு காதல் ஓகே ஆகி விரைவில் திருமணம் நடக்கப்போகிறது.
திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில் சமந்தா நாகாவுக்கு தன் காதல் பரிசாக ரூ. 27 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிக்கொடுத்துள்ளார்.
நாகாவுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தனக்கு கிடைத்த காதல் பரிசை தானே RTO அலுவலகம் வரை ஓட்டிச்சென்றாராம்.
பதிவிற்காக மட்டும் 4 லட்சம் ரூபாய் வரி செலுத்தியுள்ளாராம்.