2036ல் கனடாவின் சனத்தொகையில் குடிவரவாளர்கள் ஒரு பெரும்பங்கை வகிப்பர்!
2036 அளவில் கனடியர்களில் அரைவாசி மக்கள் குடிவரவாளர்கள், அவர்களின் பிள்ளைகாளக இருப்பர் என கணிக்கப்படுகின்றது.
புலம் பெயர்ந்தோரின் நாடாக கனடா விளங்கலாம் என புதிய மக்கள் தொகை உத்தேச கணிப்பு காட்டுவதாக கூறப்படுகின்றது.
U.S மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகரித்த குடியேற்ற எதிர்ப்பு காணப்பட்ட போதிலும் கனடாவின் பன்முக கலாச்சாரம் உயிருடன் இருப்பதோடு எதிர்வரும் வருடங்களில் வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றதென கனடா புள்ளிவிபரவியலின் புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
2036ல் கிட்டத்தட்ட இரண்டு கனடியர்களிற்கு ஒருவர் அல்லது 44.2 மற்றும் 49.9சதவிகிதம் புலம்பெயர்ந்தோர் அல்லது அவர்களது பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள்.
2011ல் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறை புலம் பெயர்ந்தோர் தொகை 38.2சதவிகிதமாக இருந்தது.
அதிகரித்த இறப்பு எண்ணிக்கை, 1990ன் முற்பகுதியில் காணப்பட்ட குறைந்த கருத்தரிப்பு விகிதம் கனடாவில் புலம் பெயர்ந்தோரின் அதிகரித்த எண்ணிக்கைக்கு காரணமாகும்.
கனடாவின் பெரிய நகரங்கள் புதிய வரவாளர்களின் முதன்மை இடங்களாக அமைகின்றன.
ரொறொன்ரோ, மொன்றியல் மற்றும் வன்கூவர் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1871-ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு 16.1சதவிகிதம் புலம்பெயர்ந்தோர் தொகை Britain, United States மற்றும் Germany ஆகிய நாடுகளில் இருந்து வந்தனர் என தெரிவிக்கின்றது.
தெற்கு ஆசியர்களே 2036லும் அதிகரித்தவர்களாக காணப்படுவர்.
மதம் சார்ந்த ரீதியில் கத்தோலிக்க மதத்தை சாராதவர்களின் எண்ணிக்கை 2036ல் இரட்டிப்பு மடங்காக காணப்படும்.
Muslim, Hindu மற்றும் Sikh மதங்களின் அனுபவங்கள் வளர்ச்சியடைந்த நிலையை அடையும் எனவும் கருதப்படுகின்றது.
10.7மில்லியன்களிற்கும் 13.8மில்லியன்களிற்கும் இடைப்பட்ட மக்களின் முதல் மொழி ஆங்கிலமோ அல்லது பிரெஞ்ச் மொழியாகவோ இருக்கமாட்டாது.
–