வதிவிட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காதோர் கனடாவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்!
வதிவிட நிபந்தனைகளை நிறைவேற்றாததன் காரணமாக, கனேடிய எல்லைகளில் இடைமறிக்கப்பட்டு, கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டொன்றிற்கு சராசரியாக 1,400 ஆகும்.
இவ்வாறு வெளியேற்றப்படும் புதிய குடிவரவாளர்கள் தமது நிரந்தர வதிவுடைமையை மீளப்பெறும் பொருட்டு மேன்முறையீடு செய்யலாம் எனினும், அத்தகைய மேன்முறையீடுகளில் பத்தில் ஒன்றே வெற்றியடையும் சாத்தியம் உள்ளது என அரச தரவுகள் தெரிவிக்கின்றன.
கனேடிய குடிவரவுச் சட்ட விதிகளுக்கமைய, ஐந்து வருட காலப்பகுதியினுள் 730 நாட்கள் கனடாவில் தங்கியிருந்தால் மட்டுமே அவர்கள் தமது நிரந்தர வதிவிட உரிமையை தக்கவைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் அவர்களது நிரந்தர வதிவிட உரிமை பறிக்கப்படும்.