‘பரியேறும் பெருமாள் ‘, ‘கபாலி’, ‘ மெட்ராஸ் ‘, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களில் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராக பிரபலமான நடிகர் லிங்கேஷ் ‘காலேஜ் ரோடு’ எனும் திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ என் காதலே ‘ எனும் திரைப்படத்தின் இடம்பெற்ற ‘என்னானதோ..ஏதானதோ.. எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ என் காதலே ‘ எனும் திரைப்படத்தில் லிங்கேஷ் , காட்பாடி ராஜன், திவ்யா தாமஸ், லேயா , மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு , தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டோனி ஜான் – வெங்கடேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாண்டி சான்டெல்லோ இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஸ்கைவாண்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஜெயலட்சுமி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த தருணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ என்னானதோ ஏதானதோ..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சந்துரு எழுத, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். இளமையில் மனதில் ஏற்படும் தடுமாற்றத்தையும், காதல் பற்றிய எண்ணங்களையும் ஒரு பெண் பகிர்ந்து கொள்வது போல் இனிமையான இசை பின்னணியில் வெளியான இந்தப் பாடல் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.