மருத்துவர் அர்ச்சுனாவின் வருகை எமது தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இன்றைய தலைவர்கள் ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகிறார்கள்.
சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று. குறுகிய தேர்தல் நலன்களுக்காக ஒன்று சேரும் இவர்களால் எம் கொள்கைக்காக மாத்திரம் ஒன்று சேர முடியாதுள்ளது. தன்னலம் மாத்திரமே இவர்களின் அடிப்படை.
தேசிய தலைவர் அவர்களால் ஒன்றாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தலைமைப்பதவிக்காக மூக்குடைபட்டும் திருத்தாவர்களின் அராஜகம் நீள்கின்றது.
இந்த நிலையில் அர்ச்சுனா பாராளமன்றத்தில் துணிவாகப் பேசுகிறார். ஶ்ரீலங்கா அரசுக்கு பல எதிர்வினைகளை முன்வைக்கிறார். எம் வீரர்களின் வரலாறுகளை எடுத்துரைக்கின்றார்.
காலம் காலமாக ஏமாற்றும் எம் தலைவர்களுக்க அர்ச்சுனாவின் வருகை பாடமாக இருக்கட்டும். சில விமர்சனங்கள் இருந்தாலும் அர்ச்சுனாவை பாராட்ட வேண்டும். இனியும் திருந்தாவர்கள் எம் மக்களால் தூக்கி வீசப்படுவார்கள்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை