அரசியல்வாதிகளுக்கு என்ன மாதிரியான பிரச்சினை கொடுத்தாலும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஒலபொதுவ விகாரையில் வழிபாடில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“எங்களுக்குப் பிரச்சினை கொடுத்தால் பரவாயில்லை. மக்களைப் பிரச்சினையில் தள்ளிவிடாமல் இருந்தால் சரி.
மக்களுக்கான தீர்வு
இப்போது அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். மக்களையும் பிரச்சினைகளில் தள்ளிவிடுகிறார்கள்.

எங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தாருங்கள் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.