சமுத்திரக்கனி நடிக்கும் படங்கள் என்றால் அவை அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்ப உறுப்பினர்களுடன் படமாளிகைக்கு சென்று கண்டு ரசிக்கும் படைப்புகளாக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராமம் ராகவம் என்னும் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி தன்ராஜ் ஹரிஷ் உத்தமன் சத்யா மோக்ஷா சென்ட் குப்தா பிரமோதினி சீனிவாஸ் ரெட்டி பிரித்விராஜ் சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் துர்கா பிரசாத் ஒலிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் சிலுவேறு இசை அமைத்திருக்கிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு மேலாண்மையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ப்ரீத்தி பல வரப்பு தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை பிரபாகர் ஆரிபாக வழங்குகிறார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி அன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை வெளியிட்டுற்கு முன்னர் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையின் நடைபெற்றது இந்நிகழ்வில் கதையின் நாயகனான சமுத்திரக்கனியுடன் இயக்குநர் – நடிகர் தம்பி ராமையா , இயக்குநர் மணிமாறன், இயக்குநர் -நடிகர் சுப்பிரமணிய சிவா , இயக்குநர் தன்ராஜ், இயக்குநர் நந்தா பெரியசாமி, நடிகர் ஹரீஷ், இயக்குநர் ‘சாட்டை’ அன்பழகன், பிக் பொஸ் முத்துக்குமரன், அபிஷேக், தீபக், இயக்குநர் பிராங்கிளின், இயக்குநர் ஜெயபிரகாஷ், இயக்குநர் கார்த்திக், வேல்முருகன் நடிகை மோக்ஷா, நடிகை பிரமோதினி , பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் சமுத்திரக்கனி பேசுகையில், ” இந்த மேடை எனக்கு ஸ்பெஷலானது. என்னுடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய படைப்பாளிகள் இங்கு ஒன்று திரண்டு இருக்கிறார்கள். வாழ்க்கையின் இறுதியில் நாம் நடித்த திரைப்படங்களை நினைவுப்படுத்தி பார்க்கும்போது அதில் சில படங்களின் பட்டியல்கள் இருக்கும்.
அந்தப் பட்டியலில் குறைந்தபட்சம் 10 படங்களாவது இடம்பெற வேண்டும் என விரும்புவேன். அந்த வகையில் நான் விரும்பும் படங்களை இயக்கிய இயக்குநர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. இது என்னால் மறக்க இயலாத விடயம்.
‘சாட்டை’ படத்தில் பணியாற்றும்போது தான் தம்பி ராமையாவின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. ‘தலைக்குத்தல்’ , ‘வெள்ளை யானை’, ‘சங்கத் தலைவன்’, ‘மாணிக்கம்’, ‘ரைட்டர்’ என மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் இங்கு வருகை தந்து, ‘ராமம் ராகவம்’ படத்தை வாழ்த்துவதும் மறக்க முடியாத தருணங்கள். இதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.