வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்கள் வழங்கி வைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


