யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் மற்றும் அவரது குழுவினர் கடந்த மாதம் (26.12.2024) அன்று திருநெல்வேலி பகுதியில் வழமையான உணவக பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
காலாவதியான பொருட்கள்
இதன்போது திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காக திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்கள் மற்றும் சுட்டுத்துண்டு எதுவும் இல்லாத பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று (06) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கினை இன்றையதினமே விசாரணைக்கு எடுத்துகொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் உணவக உரிமையாளரிற்கு 70,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.