குருணாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தள்ளது.
45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று திங்கட்கிழமை (02) கால்வாய் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
சீரற்ற வானிலையால் 139,500 குடும்பங்களைச் சேர்ந்த 470,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.