இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,785 ஆகும்.
இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,651,335 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 218,350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 209,181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதத்தில் 113,470 சுற்றுலாப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 187,810 சுற்றுலாப் பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 164,609 சுற்றுலாப் பயணிகளும், செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபர் மாதத்தில் 135,907 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.