தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (12) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது ஆனால் இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஒரு ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது.
தேர்தல் நியமனக் குழு
எமது கட்சியின் தேர்தல் நியமனக் குழுவானது கடந்த 2018 இல் தேர்வுசெய்யப்பட்டது அதில் சட்டத்தரணி தவராசா (K.V Thavarasha), சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), ஈ.சரவணபவன் (E. Saravanapavan), நான் உட்பட நான்கு பேர் அந்த குழுவில் இருந்தோம்.
இந்தநிலையில், திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்கு பேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சேயோன் (Seyon) மற்றும் ரஞ்சினி (Ranjini) ஆகியோர் சேர்க்கப்பட்டனர் இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்பட்டது.
வன்னியில் வெல்ல வேண்டும் என்ற டம்மி விளையாட்டே இது எனவே பதில் பொதுச்செயலாளருக்கு நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளேன்.
இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளை செய்வார்கள் இவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் அத்தோடு தோல்வியடைந்தவர்களை வேட்பாளராக போடுவதில்லை என்று கட்சி ஒரு போதும் முடிவெடுக்கவில்லை.
அப்படி ஒரு தீர்மானம் பொதுக்குழுவிலும், மத்தியகுழுவிலும் இல்லை அத்தோடு கட்சியை வெட்டிவிட்டு ஒரு சிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல் எப்படி இந்த சதிவேலையினை திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள்
தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்ய முடியவில்லை என்பதாலும் மற்றும் நியமனக்குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலும் மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) பதவி விலகினார்.
வேட்பாளர்கள் டம்மிகள்
நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சத்தியலிங்கமும் (Sathyalingam) மற்றும் சுமந்திரனும் (M. A. Sumanthiran) கருதுகிறார்கள்.
தமிழரசுக்கட்சி அதுவல்ல இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது ஒருவரை தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள் இவர்களால் எப்படி வெல்ல முடியும்.
செயலாளர் பதவி தரம் தாழ்ந்தது இன்று வன்னியில் புதிதாக போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர் மற்றும் அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர்.
வேட்பாளராக என்னை தெரிவு செய்யுமாறு நான் ஒரு போதும் கோரவில்லை எனக்கு பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே (Vimaladas) நான் பரிந்துரை செய்தேன்.
கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்ப்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியினை இன்று கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப்பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்ப்பட்டிருந்தனர்.
நியமனக்குழுவின் வேலை
ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதுடன் தேசியபட்டியல் வழங்க விடோம் தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகிறோம் என்று அழைக்கிறார்கள்.
இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை உங்களுக்குள்ளேயே பிரித்துக் கொள்ளவா இந்தக்குழுவை போட்டோம் தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம்.
அது நடக்கவில்லை ஆனால் தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்கு கொடுக்க கூடாது தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாவிட்டால் அதனைமட்டும் எப்படி கொடுக்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியபட்டியலாம் என்று அங்கு ஒருவர் இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார் கட்சி என்ன றோட்டில் விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக் கொண்டு போறதுக்கு.
பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கே தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவேண்டும் மாகாணசபையில் ஊழல் செய்தார் ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) ஆட்சிக்கு வந்தார்.
தமிழரசுக் கட்சி தெரிவு செய்தவர்கள் ஊழல் மோசடிக்காரர்கள் மாகாண சபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர்.