காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான இன்றைய பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/262787/download__1_.png)
திமுத் கருணாரட்ன 23 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 9 விக்கெட்கள் மீதம் இருக்க நியூஸிலாந்தைவிட 3 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை இருக்கிறது.
இந்தப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை 305 ஓட்டங்களைப் பெற்றது.
இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றது.
க்லென் பிலிப்ஸ் ஆட்டம் இழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 136 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரும்.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/262786/download.png)