ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க(geetha kumarasinghe) தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (செப்டம்பர் 9) பிற்பகல் கண்டியில்(kandy) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.
எதிர்காலம் குறித்து சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
நாட்டின் தற்போதைய நிலை காரணமாக பாதிக்கப்படும் மக்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சஜித்தின் பொதுச் சேவை விலைமதிப்பற்றது
சஜித் பிரேமதாச பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கியபோதும், பெண்களின் சுகாதாரத்திற்காக உழைத்தபோதும் சமூகம் அவரைப் பார்த்து சிரித்தது, ஆனால் அவரது பொதுச் சேவை விலைமதிப்பற்றது என்று அவர் வலியுறுத்தினார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கீதா குமாரசிங்க தற்போதைய அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக உள்ளார்.