இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் என இலங்கையின் புத்திஜீவிகள் கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும் எனவும் அந்த குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட குழுவினர் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
தேசிய மக்கள் சக்தி என்பது 2022 ம் ஆண்டு மக்கள் போராட்டம் மூலம் வெளிப்பட்ட மக்கள் அபிலாசைகளுடன் தொடர்புபட்ட பிரதான இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாற்றமடைந்துவருகின்றது.
இந்த நிலைமை 1947ம் ஆண்டு சிலோனின் முதலாவது தேசிய தேர்தலின் போது காணப்பட்ட நிலைமைக்கு ஒப்பானது – நாங்கள் பொன்னான வாய்ப்பை தவறவிட்டோம்.
ஆகவே எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் அதன் பின்னர் இலங்கை சமூகத்தில் கடும் கருத்துவேறுபாட்டை தொடர்ந்தும் உருவாக்கிவரும் இனப்பிரச்சினை உட்பட தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கும் பின்வரும் விடயங்களிற்கு முன்னுரிமைவழங்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான முற்போக்கு மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதன் மூலம் மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து இனக்குழுக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்கவேண்டும்.
2022 போராட்டத்தின் போது இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும்,தேசிய மக்கள் சக்தி அவற்றை முழுமையாக பிரதிநிதித்துவம் செய்வதற்கு தவறிவிட்டது என்பது எங்களின் அவதானிப்பு.
1947ம் ஆண்டின் முதலாவது பொதுத்தேர்தலின் போது நவகாலனித்துவவாதத்திற்கு எதிரான மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்திய மையநீரோட்ட கட்சி லங்கா சமசமாஜ கட்சியாகும்.
இதன் காரணமாக நவதாராளவாதத்திற்கு எதிரான அனைத்து முற்போக்கு இடதுசாரி சக்திகளையும்ஐக்கியப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய விசேட கடப்பாடு லங்காசமசமாஜகட்சிக்கு காணப்பட்டது. அதனை நிறைவேற்றியிருந்தால் பாரதூரமான தவறுகள் இடம்பெற்றிருக்காது மேலும் 1947ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்புஇடதுசாரிகள் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்திருக்கும்.
அது நடந்திருந்தால் பொது எதிரிக்கு மலையகதமிழர்களின் பிரஜாவுரிமை அரசியல் உரிமைகளை பறிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திராது.
ஆகவே 1947 ம் ஆண்டு தேர்தலில் லங்கா சமசமாஜகட்சி இழைத்த தவறுகள் 2024 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இழைக்கப்பாடமலிருப்பதை உறுதி செய்வதற்கான விசேட பொறுப்பு தேசியமக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான முற்போக்கு மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதற்கு மூலம் மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்.
இந்த மூலோபாய தொலைநோக்குடன் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து இனக்குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைப்பதே தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படவேண்டும்.
அந்த தீர்வு வழமைபோல பொதுஎதிரி இனவெறியை தூண்டுவதற்கு வழிவகுக்ககூடியதாக காணப்படக்கூடாது.
மேலும் வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும்.