வைத்திய சான்றிதழ் இன்றி இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படும் போலி வைத்தியரை கைது செய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (15) உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த சிறுவர்களின் தந்தை வழங்கிய வாக்குமூலத்தை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெல்லம்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் இல்லாத சந்தர்ப்பத்தின் போது சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படும் நபரொருவரை கைது செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.