12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார்.
குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது சந்தேக நபரான இளைஞன், சிறுமியை வழிமறித்து பலாத்காரமாக வனப்பகுதியொன்றிற்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது