சந்தை மதிப்பு கொண்ட நடிகராக திகழும் பரத் கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கும் ‘காளிதாஸ் 2 ‘ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘காளிதாஸ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகும் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத் மற்றும் அஜய் கார்த்திக் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
எக்சன் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.