இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுகள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.
அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா – இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை – இந்திய இருதரப்பு ஒத்துழைப்புக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுவதாக அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.