கனடா ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் இழிவுபடுத்திய முல்லை மதி என்பவர் யார்? இவரது எண்ணம் என்ன? ஏன் இவர் ஊடகங்களை நோக்கி இழிவுபடுத்தல்களை மேற்கொள்ளுகிறார்?
நமது விடுதலைக்கான பயணத்தில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும். விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்றார் எமது தேசிய தலைவர்.
இந்த நிலையில் என்னைப் போன்ற ஊடகவியலாளர்கள் பல்வேறு சவால்களின் மத்தியில் தாய்நாட்டுக்காக எமது ஊடகத்தின் வழி குரல் கொடுத்து போராடி வருகின்றோம்.
இந்த நிலையில் எம்மைப் போன்ற ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் முல்லை மதி என்ற இவர் பற்றிய சில விபரங்களை தருகிறோம். மக்களே தீர்ப்பையும் தீர்மானத்தையும் தரட்டும்.
மகிந்த உருவாக்கிய ஜனநாயக போராளிகள் குழுவில் கனடாவுக்கான தொடர்பாளராக இரு வருடங்களுக்கு மேலாக செயல்பட்டவர் இவர்.
அப்போது இவரது நண்பர்கள் பலரும் இவரை பிழையான பாதையில் தவறான அணுகு முறையில் மஹிந்தவுக்கு கீழ் செயல்படுவதாக சுட்டிக்காட்டி தடுத்தார்கள் இவர் எவரையும் செவிமடுக்கவில்லை.
அதன்பின்னர் மஹிந்த அந்த ஜனநாயக போராளிகள் குழுவோடு கூட நின்று படம் எடுத்து வெளியிட்ட போது இவர் கனடாவில் சில வருடங்கள் தலை மறைவானர். தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள கரையை கழுவுவதற்கு நாடு கடந்த அரசினுள் பின் கதவால் நுழைந்துள்ளார்.
இவர் நல்லது செய்வார் என நம்புவோரும் உள்ளனர் அனைத்தையும் நாறடிப்பார் என நம்புவோரும் உள்ளனர்.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தற்போது கனடாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தையும் இழிவு படுத்தி அங்கேயே பேசியுள்ளார்..
ஊடகப் போராளி கிருபா பிள்ளை