புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து பத்து சிறை கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே விடுதலை செய்யப்பட்டனர்.
நாடு பூராவும் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 779 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.